உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லாத்தூர் கோவிலில் நவராத்திரி உற்சவம்

நல்லாத்தூர் கோவிலில் நவராத்திரி உற்சவம்

கண்டமங்கலம்: நல்லாத்தூர் வரதராஜபெருமாள் கோவிலில், நவராத்திரி உற்சவத்தையொட்டி, ராமர் அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். புதுச்சேரி ஏம்பலம் அடுத்த நல்லாத்தூர் வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 5ம் தேதி முதல் நவராத்திரி உற்சவம் நடந்து வருகிறது. அதையொட்டி, தினமும் காலை 10:00 மணிக்கு திருமஞ்சனம், இரவு 7:00 மணிக்கு சன்னதி புறப்பாடு, 7:30 மணிக்கு ஊஞ்சல் சேவை நடக்கிறது. ஊஞ்சல் சேவையில் தினமும் ஒரு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 7ம் நாள் உற்சவமான நேற்று முன்தினம், ராமர் அலங்காரத்தில், பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை, கோவில் அறங்காவல் குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !