உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாரதாம்பாள் கோவிலில் மகா சண்டிஹோமம்

சாரதாம்பாள் கோவிலில் மகா சண்டிஹோமம்

புதுச்சேரி: சாரதாம்பாள் கோவிலில் உலக நலன் வேண்டி நேற்று மகா சண்டிஹோமம் நடந்தது. எல்லைப்பிள்ளைச்சாவடி சிருங்கேரி சிவகங்கா மடம் சாரதாம்பாள் கோவிலில் உலக நலன் வேண்டி 39ம் ஆண்டு நவராத்திரி ஹோமம் கடந்த 5ம் தேதி துவங்கியது. 6ம் தேதி காயத்திரி ஹோமம், 7ம் தேதி மகா ருத்ர மற்றும் கந்தர்வ ராஜஹோமம் நடந்தது. தொடர்ந்து, 8ம் தேதி நவக்கிரக மிருத்ஜெய ஹோமம், 9ம் தேதி தன்வந்திரி மற்றும் ஹயக்கிரீவர் ஹோமம், 10ம் தேதி மகா சுதர்சன மற்றும் ஆஞ்சநேய ஹோமம், 11ம் தேதி சூக்த மற்றும் அஷ்ட லட்சுமி ஹோமம், 12ம் தேதி அதிஷ்டானத்தில் ஆராதனை நடந்தது. நேற்று, மகா சண்டி ஹோமம் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !