உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏராளமான தலித் மக்கள் தீக்ஷா பூமி யில் வழிபாடு!

ஏராளமான தலித் மக்கள் தீக்ஷா பூமி யில் வழிபாடு!

நாக்பூர்: சட்ட மேதை, அம்பேத்கர், புத்தமதத்தை தழுவிய இடத்தில், லட்சக்கணக்கான தலித் மக்கள் வழிபாடு நடத்தி, அந்நாளை கொண்டாடினர். பல ஆண்டுகளுக்கு முன், இந்து மதத்தில், தலித் மக்களுக்கு சமஉரிமை கிடைக்காததால், அம்பேத்கர் தலைமையில், லட்சக்கணக்கான தலித் மக்கள், புத்த மதத்திற்கு மாறினர். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள ஒரு இடத்தில், 1956ம் ஆண்டு, விஜயதசமி நாளில், மதமாற்றம் நிகழ்ந்தது. அந்த இடத்தை, தீக்ஷா பூமி என, தலித் மக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த நாளில், அந்த இடத்தில் கூடி, அம்பேத்கர் புகழ் பாடுகின்றனர். நேற்று முன்தினம், தீக்ஷா பூமியில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டே, விவசாய அமைச்சர், சரத் பவார் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதும் இருந்து, லட்சக்கணக்கான தலித் மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !