செஞ்சி கோவிலில் நவராத்திரி விழா
ADDED :4509 days ago
செஞ்சி :செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது. செஞ்சி காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் கடந்த 5ம் தேதி முதல் நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. நேற்று காலை நவரத்திரி நிறைவு விழாவை முன்னிட்டு ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் செய்தனர். அம்மனுக்கு நவராத்திரி நிறைவு விசேஷ அர்ச்சனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை கிரிசங்கர்குருக்கள் செய்தார்.