தீவனூர் கோவிலில் திருக்கல்யாண விழா
ADDED :4379 days ago
திண்டிவனம்: தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் ஸ்ரீனிவாச கல்யாணம் நடந்தது. புரட்டாசி மாதம் நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு, திண்டிவனம் அடுத்த தீவனூர் ஆதிநாராயண பெருமாள் என்கிற லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, உற்சவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு ஸ்ரீனிவாச திருக் கல்யாணம் நடந்தது. விழா வில் திண்டிவனம் சேர்மன் வெங்கடேசன், பி. எஸ்.என்.எல்., இளநிலை பொறியாளர் மேகலா உட்பட திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா முனுசாமி செய்திருந்தார்.