கால பைரவர் சிலையில் வியர்வை துளியால் பரபரப்பு!
ADDED :4379 days ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி, புவனேஸ்வரர் கோவிலில் உள்ள கால பைரவர் சிலையில், வியர்வை துளிகள் கசிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் அடுத்த, விக்கிரவாண்டி, புவனேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் மாலை, விஜயதசமியை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது, காலபைரவர் சிலையில் வியர்வை துளிகள் கசிவதைக் கண்டு, ஆச்சரியமடைந்த பக்தர்கள், கோவில் பூசாரியிடம் கூறினர். சிலைக்கு அபிஷேகம் செய்ததால், தண்ணீர் வடிந்திருக்கும் என, கூறியபடி, தண்ணீரை துடைத்தார். சிலை மீது மீண்டும், வியர்வை துளிர்த்தது. தகவலறிந்த சுற்றுப்புற பகுதியை சேர்ந்தோர், சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். இச்சம்பவத்தால், கோவிலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.