விக்கிரவாண்டி கோவிலில் அம்மன் ஊஞ்சல் உற்சவம்
ADDED :4375 days ago
விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி புவனேஸ்வரர் கோவிலில் நவராத்திரி நிறைவு விழாவையொட்டி ஊஞ்சல் உற்சவ விழா நடந்தது. விக்கிரவாண்டி புவனேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி அம்மனுக்கு உற்சவம் தினமும் நடந்து வந்தது. நிறைவு விழாவை யொட்டி விஜயதசமி அன்று புவனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அம்மன் கலைமகள் அலங்காரத்தில் பொன் ஊஞ்சலில் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது.விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சுப்புராயலு, குமாரசாமி, திருநாவுக்கரசு, சீனுவாசன், சேதுபதி குருக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.