உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழக்கரையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை!

கீழக்கரையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை!

கீழக்கரை: கீழக்கரையில் உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்கம் சார்பில்,ஹமீதியா பெண்கள் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மழை வேண்டி  சிறப்பு தொழுகை நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் மழை இல்லாமல் கிணறுகள்,ஊரணிகள், கண்மாய்கள் வறண்ட நிலையில் காணப்படுகிறது.இதனால் நீர் ஆதாரம் குறைந்து தண்ணீருக்கு மக்கள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர்.இதை தொடர்ந்து இன்று புதுப்பள்ளி கதீப் மன்சூர் அலி ஆலிம் தலைமையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.இதில் கீழக்கரை அனைத்து ஜமாத் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !