உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழப்பாவூர் பெருமாள் கோயிலில் திருவோண ஏகதீர்த்தவாரி

கீழப்பாவூர் பெருமாள் கோயிலில் திருவோண ஏகதீர்த்தவாரி

பாவூர்சத்திரம்: கீழப்பாவூர் நரசிம்ம பெருமாள் கோயிலில் புரட்டாசி திருவோண ஏகதீர்த்தவாரி உற்சவம் நடந்தது. கீழப்பாவூர் அலர்மேல் மங்காபத்மாவதி சமேத பிரசன்ன வெங்கடாசலபதி மற்றும் நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலின் புரட்டாசி திருவோண உற்சவம் கடந்த 13ம்தேதி காலை 6.30 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை நடந்தது. விழாவில் வாஸ்துசாந்தி, பிரவேசபலி, புருசசுத்த ஹோமம், வருண ஜெபத்தை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி தெப்பகுளத்தை மூன்று முறை வலம் வந்து உற்சவ மூர்த்தியுடன் தெப்பகுளத்தில் தீர்த்தவாரி நடந்தது. தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் தீர்த்தவாரியை காண திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !