உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகிரி சித்த நிவாரண குடிலில் மஹாசண்டி ஹோமம்

சிவகிரி சித்த நிவாரண குடிலில் மஹாசண்டி ஹோமம்

சிவகிரி: சிவகிரி கோரக்க சித்தர் சித்த நிவாரண குடிலில் உலக நன்மை வேண்டி மஹாசண்டி ஹோமம் நடந்தது. சிவகிரியிலிருந்து தேவிபட்டணம் செல்லும் வழியில் பெரியகுளத்தின் வடக்குப்பகுதியில் கோரக்க சித்தர் பீடம் உள்ளது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையினை முன்னிட்டு உலக நன்மை வேண்டியும், மழை பெய்து வளமை பெருகுவதற்கும் மஹாசண்டி ஹோமம் நடத்தப்பட்டது. சித்தர் பீடத்தில் ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டது. யாகசாலையின் முன் நவராத்திரி அம்மன் எழுந்தருளி செய்யப்பட்டது. இரண்டு நாட்கள் யாக குண்டல பூஜைகள் நடந்தது. முதல் நாள் காலையில் மகாகணபதி ஹோமத்துடன் பூஜை துவங்கியது. மகாசுதர்சன, மகாலெஷ்மி, மகாம்ருத்யுஜயஹோமம் மகாதுர்கா ஹோமம், மாலையில் துர்க்காதேவி, சரஸ்வதி தேவி, லெட்சுமி தேவி, சண்டி மூலமந்திரஹோமம் வைரவர் பலி, லலிதா சகஸ்ர நாமம் இரண்டாம் நாள் நவக்கிரகஹோமம், துர்க்காதேவி பஞ்சதூர்னியர், உத்தவ், பராமலிந்த ஹோமம், மகாபூர்ணகுதி ஆகிய ஹோமங்கள் நடந்தது. சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இரண்டு நாட்களும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொள்வதற்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோரக்க சித்தர் சித்த நிவாரண குடில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !