புளியரை கோயிலில் நவராத்திரி கொலு பூஜை
ADDED :4486 days ago
புளியரை: புளியரை குருபகவான் கோயிலில் நவராத்திரி கொலு பூஜை நடந்தன. புளியரை சிவகாமி அம்பாள் சமேத சதாசிவ மூர்த்தி கோயிலில் நவராத்திரி கொலு பூஜை நடந்தது. சிவகாமி அம்பாள் சமேத சதாசிவ மூர்த்திக்கு நடுவே உள்ள கொலு மண்டபத்தில் நவராத்திரி பூஜை வழிபாடுகள் நடந்தன. பூஜை வழிபாட்டில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்பிகை குறித்து பாடல்கள் பாடி வழிபட்டனர்.