ஆழ்வார்குறிச்சியில் அற்புதம்: பெருமாள் கோயிலை தேடிவரும் புத்திசாலி பசு!
ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சி வேங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு தினமும் தாமாகவே வந்து பழம் கேட்கும் புத்திசாலி பசு. இந்துக்கள் பசுவை கோமாதாவாக கருதி வழிபடுவது வழக்கம். பசுவில் அனைத்து சுவாமிகளும் இருப்பது மிகவும் பெரிய விஷயமாக கருதி கோமாதா வழிபாடு நடத்துவர். வீடு கட்டி கிரஹப்பிரவேசம், கும்பாபிஷேகம், யாகசாலை பூஜைகளில் கோமாதா பூஜைக்கென சிறப்பு வழிபாடு நடைபெறும். பசுவிற்கு பழம், புல், கீரை என பொருட்களை வழங்கி பசுவை தொட்டு கும்பிடுவது வழக்கமாக உள்ளது. பசுவை தேடிச் சென்று பழம் வாங்கி கொடுப்பார்கள். ஆனால் ஆழ்வார்குறிச்சி வேங்கடேசப் பெருமாள் கோயிலில் தினமும் காலையில் பசு தேடி வந்து பழம் சாப்பிட்டு விட்டு செல்லும். ஆழ்வார்குறிச்சி வேங்கடேசப் பெருமாள் கோயில் அருகே வடக்கு நோக்கி செல்வம் தெருவில் வசிப்பவர் இசக்கியம்ாள். இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது வீட்டில் உள்ள பசு தினமும் காலையில் சுமார் 7.45 மணியளவில் இருந்து 8.15க்குள் வேக வேகமாக கழுத்தில் உள்ள மணியோசையுடன் நடந்து வரும். கோயில் முன் வந்து நிற்கும் அர்ச்சகர் பழம் கொண்டு வந்து கொடுக்கும் வரை அங்கேயே நிற்கும். பழத்தை தின்று விட்டு அப்படியே மாடத்தெரு, சன்னதித்தெருவில் சில குறிப்பிட்ட வீடுகள் வாசல் வரும் (பழம் கொடுத்து பழக்கப்படுத்தியவர்கள்) பழம் தின்று விட்டு செல்வம். கோயில் அர்ச்சகர் தினமும் பழம் கொடுப்பது வழக்கமாகிவிட்டாலும், கடந்த நவராத்திரியின் போது பசு தாமாக வந்து பழம் கேட்பதால் பலர் சந்தோஷமாக பசுவிற்கு பழம் தவறாமல் வழங்குகின்றனர். சிறிது நேரம் தான் நிற்கும் பழம் கொடுக்கவில்லை என்றால் போய்விடும் பழக்கத்தையும் பசு வைத்துள்ளது.