அன்னபூரணி, நரசிம்மர் திருவீதி உலா
ADDED :4374 days ago
கோவை: ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அறக்கட்டளை சார்பில், ஆர்.எஸ்.புரம் மேற்கு திருவேங்கிடசாமி ரோட்டில் செயல்படும், வேதபாடசாலை ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் கோவிலில், நவராத்திரி விழா கடந்த 5ல் துவங்கியது; நேற்று முன்தினம் நிறைவடைந்தது. உலகநலன் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பூஜைகள், ஜபஹோமங்கள் நடத்தப்பட்டன. ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர், ஆதிசங்கரர் சுவாமிகள் திருவீதி உலா நடந்தது. மேற்கு திருவேங்கிடசாமி ரோடு, தடாகம் ரோடு, மேற்கு பொன்னுரங்கம் ரோடு, வ.உ.சி., ரோடு, சம்பந்தம் ரோடு, பாதர் ராண்டி வீதி வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.