மாயவன் கோவிலில் நாளை பவுர்ணமி பூஜை வழிபாடு
ADDED :4375 days ago
வாழப்பாடி: வாழப்பாடி புதுப்பாளையம் எம்பெருமான் மாயவன் கோவிலில், உலக நன்மைக்காக நாளை, (18ம் தேதி) சத்ய நாராயண ஹோம பவுர்ணமி பூஜை வழிபாடு நடக்கிறது. வாழப்பாடி பேரூராட்சி, புதுப்பாளையம் மாயவன் மலைக்குன்றில் பழமையான எம்பெருமான் மாயவன் கோவில் அமைந்துள்ளது. அக்கோவிலுக்கு ராஜகோபுரம், மஹா மண்டபம் அமைப்பதற்கான திருப்பணி நடந்து வருகிறது. கோவிலில், உலக நன்மைக்காகவும், குழந்தையில்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவும், சத்ய நாராயண ஹோம பவுர்ணமி பூஜைக்கு கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. நாளை, (18ம் தேதி) மாலை, 4 மணிக்கு மேல் நடக்கும், சத்ய நாராயண ஹோமம் மற்றும் பவுர்ணமி சிறப்பு பூஜை வழிபாட்டில், பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி அருள் பெறலாமென கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.