உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மசூதிகள் முன் கண்காணிப்பு தீவிரம்!

மசூதிகள் முன் கண்காணிப்பு தீவிரம்!

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டத்தில்  உளவுத்துறை எச்சரிக்கையையொட்டி, மசூதிகளின் முன் புதன்கிழமை  போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.   பக்ரீத் சிறப்புத் தொழுகையையொட்டி நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பிற நபர்கள் மசூதிகளுக்குள் நுழைவதைத் தடுக்கவும் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் அனுமதியின்றி பேரணி, ஊர்வலம் செல்வதை தடுக்கவும், கண்காணிப்பை மேற்கொண்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !