அரிட்டாபட்டி இளமநாச்சியம்மன்கோயில் கோயில் திருவிழா!
ADDED :4378 days ago
மதுரை: கடந்த செவ்வாய்க்கிழமை அ.வல்லாளபட்டி அருகே உள்ள அரிட்டாபட்டி இளமநாச்சியம்மன்கோயில் புரவி எடுப்புத் திருவிழா நடைபெற்றது. திருவிழாவையொட்டி , மண் பொம்மைகளை பெண்கள் ஊர்வலமாக எடுத்துவந்தனர். அரிட்டாபட்டி மந்தைக்கோயிலில் இருந்து இளமநாச்சிஅம்மன், பெரியகருப்புசாமி சிலைகளை கிராமத்தின் வீதிகள் வழியாக கழிச்சமலை அடிவாரத்திலுள்ள இளமநாச்சிஅம்மன் கோயிலுக்கு எடுத்து வந்தனர். மேலும் கோயிலில் பொங்கலிட்டு வழிபாடு செய்டடது.