சிதம்பரம் நடராஜர் கோயிலில் புதுச்சேரி தலைமைச் செயலர் தரிசனம்!
ADDED :4378 days ago
கடலூர்: புதுச்சேரி மாநில தலைமைச் செயலர் சேட்டன் பி சாங்கி காரைக்காலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு விழாவிற்கு சென்று சிதம்பரம் வழியாக வியாழக்கிழமை புதுச்சேரிக்கு திரும்பினார். அப்போது அவர் மனைவி உமா, மகள்கள், மகன் ஆகியோருடன் உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். அவரை சிதம்பரம் உதவி ஆட்சியர் எம்.அரவிந்த், வட்டாட்சியர் எம்.விஜயாஆகியோர் வரவேற்றனர்.