உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கமுதி வீரமாகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை!

கமுதி வீரமாகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை!

ராமநாதபுரம்:  கமுதி வீரமாகாளியம்மன் கோயிலில் 13-ஆம் ஆண்டு புரட்டாசி கடைசி செவ்வாய்க்கிழமை, 150-வது திருவிளக்கு பூஜை உற்சவம் நடைபெற்றது. உற்சவத்தில் பெண்கள் பலரும் கலந்து கொண்டு, தெய்வ நாம பாராயண பாடல்கள் பாடி, திருவிளக்கு பூஜை நடத்தினர். அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.இதில் திலகவதி அம்மையார், மாதர் சங்கத்தைச் சேர்ந்த  செல்வமணி, ஆகியோர் தலைமையில்   ஏற்பாடுகளை கோயில் நிர்வாக டிரஸ்டி தலைமையில் பூசாரி சபாபதி, ஆசிரியைகள் ஆ. பொற்செல்வி, ஆர். சண்முக வள்ளி, உள்பட பலர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !