உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிந்தா கோஷம் முழங்க கோட்டை பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா நிறைவு

கோவிந்தா கோஷம் முழங்க கோட்டை பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா நிறைவு

ஈரோடு: கடந்த 6–ந் தேதி முதல் ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில்  பிரம்மோற்சவ விழா நடந்து வந்தது. இதையொட்டி தினமும் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. பிரம்மோற்சவத்தின் நிறைவுவிழாவான நேற்று காலை பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து சாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவிலுக்குள் சாமி வீதிஉலா வந்தபோது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி முழக்கமிட்டனர். மாலை 6 மணிக்கு மேல் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !