உப்புக்கோட்டை வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்தரி திருவிழா
ADDED :4372 days ago
தேனி: தேனி மாவட்டம், போடி தாலுகாவிற்கு உட்பட்ட உப்புக்கோட்டையில் வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 6-ந் தேதி தொடங்கி நவராத்திரி திருவிழா நடைபெற்று வந்தது. இதை யொட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சப்பரத்தில் அமர்ந்து பக்தர் களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வாக பெருமாள், பத்மாசுரனை அம்பு எய்து வதம் செய்யும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கையில் வில்-அம்புடன் பெருமாள் அலங்கரிக்கப்பட்டு சப்பரத்தில் அமர்த்தப்பட்டு அசுரனை அம்பு எய்து வதம் செய்யும் நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சி முடிவில், பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.