/
கோயில்கள் செய்திகள் / கோவில் திருவிழாவை முன்னிட்டு சிவகங்கை பகுதியில் குதிரை, மாட்டுவண்டி பந்தயம்!
கோவில் திருவிழாவை முன்னிட்டு சிவகங்கை பகுதியில் குதிரை, மாட்டுவண்டி பந்தயம்!
ADDED :4469 days ago
சிவகங்கை: அரண்மனை சிறுவயல் புளியங்குடிப்பட்டி கிராமத்தில் உள்ள புலிகுத்தி அம்மன் கோவில் மது எடுப்பு விழாவை முன்னிட்டு குதிரை மற்றும் மாட்டுவண்டி பந்தயங்கள் நடைபெற்றன. சின்ன மற்றும் பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் 56 வண்டிகள் கலந்து கொண்டன. இதையடுத்து பெரிய மற்றும் சிறிய குதிரை வண்டி பந்தயத்தில் மொத்தம் 28 வண்டிகள் கலந்துகொண்டன. சிவகங்கை அருகே உள்ள முடிகண்டம் கிராமத்தில் உள்ள கிராம தேவதை சிறப்பு பூஜையை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் முடிகண்டம்-மதுரை சாலையில் நடைபெற்றது. இதில் பெரியமாடு, சின்னமாடு வண்டி பந்தயம் என இரு பிரிவாக நடைபெற்ற பந்தயத்தில் மொத்தம் 27வண்டிகள் கலந்து கொண்டன.