இன்று வால்மீகி ஜெயந்தி!
ADDED :4430 days ago
காந்தி ஜெயந்தி போன்று, அக்டோபர் 18-யை வால்மீகி ஜெயந்தியாக இந்தியா முழுவதும் கொண்டாடுவது என ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம் முடிவு செய்துள்ளது. ஐப்பசி மாதம் பவுர்ணமியில் கொண்டாடபடுவதால் வால்மீகி ஜெயந்தியின் ஆங்கிலத் தேதி ஆண்டுதோறும் மாறும். வால்மீகி தான், முதன் முதலில் ராமாயணத்தை சமஸ்கிருதத்தில் எழுதினார். பின் தான் துளசிதாசர் இந்தியில் எழுதினார். வால்மீகிக்கென்று ஒரு கோயில் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேயரில் உள்ளது. வால்மீகி, துளசிதாசர் எழுதிய ராமாயணங்களில், வட மாநில பண்பாட்டின் சாயலைக் காணலாம். ஆனால் கம்பர் அதனை தமிழ்ப்பண்பாட்டிற்கு ஏற்பமாற்றி, கம்பராõமாயணம் படைத்தார். கொள்ளைக்காரானாக இருந்து, நல்வழிக்கு மாறி ராமாயணம் எழுதியவர் என வால்மீகி குறித்து, அவரது சரித்திரம் கூறுகிறது.