வால்பாறை பிரதோஷ பூஜை பக்தர்கள் பங்கேற்பு!
ADDED :4531 days ago
வால்பாறை: கோவில்களில் நடைபெற்ற பிரதோஷ பூஜையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில்காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் சிவபெருமானுக்கு நேற்றுமுன்தினம் மாலை 5.30 மணிக்கு பிரதோஷ பூஜை சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து தேன், இளநீர், தயிர், சந்தனம், குங்குமம், பால், திருமஞ்சன பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காசிவிஸ்வநாதர் தேவியருடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.