கிணத்துக்கடவில் பிரதோஷ வழிபாடு
ADDED :4430 days ago
கிணத்துக்கடவு: சிவலோகநாதர் கோவிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் நேற்றுமுன்தினம் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில், சிவலோகநாதருக்கும், நந்திக்கும் ஒரே சமயத்தில் அபிஷேக பூஜை நடந்தது. இதில், பால், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம், அரிசிமாவு போன்றவைகளால் அபிஷேக பூஜை செய்யப்பட்டது. பின் பூக்களால், சிவலோகநாதர், சிவலோகநாயகி, நந்திக்கும் சிறப்பு அலங்கார பூஜை செய்யப்பட்டு, தீபாராதணை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சிவலோகநாதரை வழிப்பட்டனர். இதேபோல், பொன்மலை வேலாயுதசாமி, பெரியகளந்தை ஆதிஸ்வரன், தேவணாம்பாளையம் அமணலிங்கேஸ்வரர், அரசம்பாளையம் திருநீலகண்டர் போன்ற கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.