உலக நன்மைக்காக அக்.,20ல் வேள்வி
ADDED :4430 days ago
நாமக்கல்: சேந்தமங்கலம் அடுத்த ராமநாதபுரம்புதூர் பாலதண்டாயுதபாணி கோவிலில், அகத்தியர் மணிமந்திர அவுசத புற்றுநோய் தடுப்பு ஆலோசனை மையம் மற்றும் துருவாசர் பவுண்டேஷன் சார்பில், உலக நன்மைக்காக வேள்வி நடக்கிறது. கொல்லிமலை கருணாநந்த ஸ்வாமிகள் தலைமை வகிக்கிறார். அக்டோபர், 20ம் தேதி அதிகாலை கணபதி ஹோமத்துடன், மஹா பிரத்தியங்காரா ஹோமம், தீபாராதனை, ஆவி மற்றும் ஏவல் தோஷ நிவர்த்தி, பஹவதி சேவை, அன்னதானம், வஸ்திர தானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொழில் மேன்மை, கர்மநோய் விலகல், குடும்ப ஒற்றுமை ஆகியவற்றுக்காக, அனைவரும் பங்கேற்கலாம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.