உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்

சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுப்புற பகுதிகளில் நடந்த மகாஅன்னாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிவன் கோவில்களில் அன்னாபிஷேகத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடப்பது வழக்கம். ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் பவுர்ணமி அன்னாபிஷேகம் இன்னும் சிறப்பு வாய்ந்தது. இந்தாண்டு அக் 18 மகா அன்னாபிஷேகம் நடந்தது. சிவனுக்கு பழங்கள், காய்கள், அன்னம் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பொள்ளாச்சி சுப்பிரமணிய ”வாமி கோவில், உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், ஒடையகுளம் ராஜராஜேஸ்வரி காமாட்சியம்மன் கோவில், கரப்பாடி அமணலிங்கேஸ்வரர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. மற்ற தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடந்தது. அக் 18 மாலை 6.00 மணிக்கு துவங்கிய இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு அன்னாபிஷேக விழா அக் 18 காலை நடந்தது. காலை 11.00 மணிக்கு தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நந்தீஸ்வருக்கு மகாஅபிஷேக பூஜை நடந்தது. பின்னர் காசிவிஸ்வநாதருக்கு பழங்கள், காய்கறிகள், அன்னம் கொண்டு அபிஷேக பூஜை நடந்தது. முன்னதாக சுவாமிக்கு அபிஷேக பூஜை நடைபெறும் பொழுது பக்தர்கள் கும்மியடித்தும், பக்தி பாடல்களை பாடியும் பக்தர்களை பரவசப்படுத்தினர். பகல் 1.30 மணிக்கு காசிவிஸ்வநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்னர். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !