உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலைக் கோவிலில் அன்னாபிஷேகம்

மலைக் கோவிலில் அன்னாபிஷேகம்

காரிமங்கலம்: காரிமங்கலம், மலைக்கோவிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி ஸ்வாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.காரிமங்கலம், ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அக் 18 காலை ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து ஸ்வாமிக்கு அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் பக்தர்கள் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் பிரகாஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
* காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரர் மடம் ஸ்ரீ வேதநாயகி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி காலையில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மாலையில் அன்னாபிஷேகம், அலங்காரத்தில் ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஏற்பாடுகளை கோவில் குருக்கள் மோகன்குமார் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.
* தர்மபுரி கோட்டை ஸ்ரீ மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், நெசவாளர் காலனி மகாலிங்கேஸ்வரர் கோவில், ஒகேனக்கல் தேச நாதேஸ்வரர் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில், அடிலம் அடிலநாதர் கோவில், பாரதிபுரம் காசி விஸ்வநாதர் கோவில் உட்பட அனைத்து சிவன் கோவில்களிலும் ஐப்பசி பவுர்ணமியையொட்டி ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அன்னாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !