பரணிபுத்தூர் தீர்த்தீஸ்வரர் கோயில் குளம் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
ADDED :4372 days ago
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பரணிபுத்தூரில் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட திரிபுரசுந்தரி உடனுறை தீர்த்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கோயில் மற்றும் கோயிலுக்குச் சொந்தமான பிரம்ம தீர்த்தகுளம் உள்ளது. குளத்தில் கோரை புற்களும், ஆகாயதாமரைச் செடிகளும் அதிக அளவில் வளர்ந்து, கடும் துர்நாற்றம் வீசிவருகிறது. இதனால் பக்தர்கள் குளத்து நீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கோயிலும், குளமும் எவ்வித பராமரிப்பும் இல்லாமல் உள்ளது. கோயில் குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை சீரமைத்து, குத்தகைப் பணம் மூலம் கோயிலைப் பராமரிக்க இந்து அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.