உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐப்பசி பவுர்ணமி: சிவாலயங்களில் அன்னாபிஷேகம்

ஐப்பசி பவுர்ணமி: சிவாலயங்களில் அன்னாபிஷேகம்

செங்கல்பட்டு வல்லம் கிராமத்தில் மகேந்திரவர்ம பலல்வ மன்னரால்  அமைக்கப்பட்ட குடைவரைக் கோயிலில் சிவனுக்கும், புலிப்பாக்கத்தில் உள்ள வியாக்ரபுரீஸ்ரர் திருக்கோயில் உள்ள சிவலிங்கத்துக்கும், திருவடிசூலம் கிராமத்தில் திருஇடைச்சுரம் ஞானபுரீஸ்வருக்கும், திருக்கழுகுன்றம் தாழக்கோயிலான அருள்மிகு பக்தவத்சலேஸ்வர் திருக்கோயில் பக்தவத்சலேஸ்வரருக்கும்,   மாமல்லபுரத்தில் உள்ள அருள்மிகு மல்லீகேஸ்வரர் திருக்கோயிலில் மல்லீகேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. அன்னாபிஷேக நிகழ்ச்சியையொட்டி ஏராளமான பக்தர்கள் சிவாலயங்களுக்குச் சென்று அன்னாபிஷேக தரிசனம் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !