நள்ளிரவு பூஜை!
ADDED :5327 days ago
தஞ்சாவூர் மாவட்டம் பரக்காலக்கோட்டை கிராமத்தில், பொது ஆவுடையார் கோயில் உள்ளது. இங்கு திங்கள்கிழமைதோறும், நள்ளிரவு 12 மணி அளவில் வழிபாடு நடைபெறுகிறது. மற்ற நாட்களில் நடை திறக்கப்படுவது இல்லை. சிதம்பரம் நடராஜர், நள்ளிரவு பூஜை முடிந்து இங்கு தனது பரிவாரங்களுடன் எழுந்தருள்வதாக ஐதீகம். தை முதல் நாள் பொங்கல் அன்று மட்டும் காலை முதல் மாலை வரை வழிபாடு நடக்கும்.