உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாலம்மன் கண் திறப்பு வைபவம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

முத்தாலம்மன் கண் திறப்பு வைபவம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

திண்டுக்கல்: தாடிக்கொம்பு அருகே அகரம் முத்தாலம்மன் கோயில் உற்சவ விழாவையொட்டி, நேற்று காலை 10.30 மணிக்கு உற்சவ அம்மனுக்கு கண் திறப்பு வைபவம் நடந்தது. பின், அம்மன் ஆயிரம்பொன் சப்பரத்தில் எழுந்தருளி, கொலு மண்டபத்தை வந்தடைந்தது. மாவிளக்கு, தீச்சட்டிஎடுத்தல், கரும்பு தொட்டில் போன்ற நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். இரவு 12 மணி புஷ்ப விமானத்தில் அம்மன் வாணக்காட்சி மண்டபத்திற்கு எழுந்தருளி, இரவு முழுவதும் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. அகரம் பேரூராட்சி தலைவர் தமிழரசி, துணைத் தலைவர் சக்திவேல், செயல் அலுவலர் செல்வராஜ், தாடிகொம்பு பேரூராட்சி தலைவர் அன்புச்செல்வி, துணைத் தலைவர் சுப்பிரமணியன், செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின், அருணா சேம்பர் உரிமையாளர்கள் மணிகண்டன், அசோகன், தொழிலதிபர்கள் அய்யப்பன், மூர்த்தி, குமரேசன், ஸ்ரீதர், பைனான்சியர் ரவிபாலன், மிராஸ்தார் சந்திர மவுலி, திண்டுக்கல் வர்த்தக சங்க தலைவர் குப்புச்சாமி, காங்கிரஸ் செயலாளர் தனபாலன், நியூ இந்துஸ்தான் ஸ்டீல்ஸ் உரிமையாளர் நடராஜன், சுரபி கேட்டரிங் கல்லூரி தாளாளர் ஜோதி முருகன், நிலக்கடலை பருப்பு வியாபாரிகள் சங்க தலைவர் சண்முகவேல், டாக்டர்கள் திருலோகசந்திரன், பாலசுந்தரி, எல்.கே.எஸ்., ஓட்டல் உரிமையாளர் ஆதிமூலம், சிவநாதன் பேக்கரி உரிமையாளர் ஜெயராமன், மினி லாரி உரிமையாளர்கள் பிரபு, சுரேஷ், ஜமாலியா டிரேடர்ஸ் உரிமையாளர் ஜாபர் அலி, சரவணா ஆயில் ஸ்டோர் உரிமையாளர் செல்வராஜ், பி.ஆர்.டி., கண்ஸ்ட்ரக்சன்ஸ் உரிமையாளர்கள் முத்துகிளி, ராஜு தேவர், அரசு ஒப்பந்தகாரர் தீத்தாபிள்ளை, தி.மு.க., மாவட்ட பிரதிநிதி செல்வராஜ், ஒன்றிய செயலாளர் பெருமாள்சாமி, பேரூர் கழக பொறுப்பாளர் நாகப்பன், தாடிகொம்பு 13வது வார்டு அ.தி.மு.க., இணைச் செயலாளர் அந்தோணி, அகரம் பேரூர் கழக துணைச் செயலாளர் அம்மாவாசை மற்றும் தாடிகொம்பு, அகரம் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் மாரிமுத்து தலைமையில் விழாக் குழுவினர் செய்திருந்தனர். இன்று மதியம் 1.30 மணிக்கு சொருகுபட்டை சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !