சபரிமலை நடை அடைப்பு: நவ.1 ல் மீண்டும் திறப்பு!
ADDED :4371 days ago
சபரிமலை: ஐப்பசி மாத பூஜைகள் முடிந்து, சபரிமலை நடை, நேற்றிரவு, 10:00 மணிக்கு அடைக்கப்பட்டது. ஐப்பசி மாத பூஜைக்காக, சபரிமலை கோயில் நடை, அக்., 15ம்தேதி மாலை திறக்கப்பட்டது.மறுநாள் காலையில், ஓராண்டு காலத்துக்கான, மேல்சாந்தி தேர்வு நடந்தது. இதை தொடர்ந்து, தினமும், வழக்கமாக நடக்கும் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, ஐந்து நாட்கள் நடந்த பூஜைகள் நிறைவு பெற்று, நேற்று இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அடுத்து, நவ., 1 ம்தேதி, மாலை, 5:30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. நவ., 2 ம்தேதி, திருவிதாங்கூர் மன்னர் பிறந்த நாளான,சித்திரை திருநாளில், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அன்று இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பின், கார்த்திகை முதல் தேதியில் துவங்கும், மண்டல கால பூஜைக்காக, நவ.,15ம்தேதி மாலை முதல், தொடர்ந்து, 41 நாட்கள் நடை திறந்திருக்கும்.