பெரியபட்டினத்தில் பள்ளிவாசல் திறப்பு விழா
ADDED :4369 days ago
பெரியபட்டினம் தக்வா நகரில் பள்ளிவாசல் திறப்பு விழா, ஊராட்சி தலைவர் எம்.எஸ்.கபீர் தலைமையில் நடந்தது. ஜலால், ஜமால் ஜூம்மா பள்ளி நிர்வாக தலைவர் அப்துல் லத்தீப், அல் மஜீதுல் பலாஹ் நிர்வாக தலைவர் ஜீனத் முன்னிலை வகித்தனர். எம்.ஜஹாங்கீர் வரவேற்றார். அல் மஜீதுல் பலாஹ் ஜூம்ஆ பள்ளி இமாம், முகம்மது இஸ்மாயில் பிரார்த்தனை செய்தார். கீழக்கரை டவுன் காஜி காதர் பக்ஷ் ஹூசைன் சித்திக், பள்ளிவாசலை திறந்து வைத்து சொற்பொழிவாற்றினார். ஜாமியா மதினத்துல் உலும் அரபிக்கல்லூரி முதல்வர் செய்யது அக்பர், ஜலால், ஜமால் ஜூம்மா பள்ளி இமாம் முகம்மது ஜாபர், வண்ணாங்குண்டு ஆலிம் சிராஜ்தீன், மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் செய்யது அகமது புகாரி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய கவுன்சிலர் அபிபுல்லா நன்றி கூறினார்.