உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராயபுதுப்பாக்கத்தில் அன்னாபிஷேகம்

ராயபுதுப்பாக்கத்தில் அன்னாபிஷேகம்

புதுச்சேரி: ராயபுதுப்பாக்கத்தில் உள்ள அரசனேஸ்வரர் கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு, அன்னாபிஷேக விழா நடந்தது. வானூர் அருகே ராயபுதுப்பாக்கம் கிராமத்தில் அழகம்மை உடனுறை அரசனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மாலை 6:00 மணிக்கு, நெல்லித்தோப்பு மார்கண்டேயபுரம் அறக்கட்டளை சார்பில், அன்னாபிஷேக விழா நடந்தது. மூலவருக்கும், அம்பாளுக்கும் மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அன்னாபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !