உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோளீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்

சோளீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்

திருவள்ளூர்: ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவிலில், அன்னாபிஷேகம் நடந்தது. பேரம்பாக்கத்தில் அமைந்துள்ள, காமாட்சி அம்பாள் உடனுறை சோளீஸ்வரர் கோவிலில், ஐப்பசி பவுர்ணமி, அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, இரவு, 7:00 மணிக்கு, சோளீஸ்வரருக்கு அன்னாபிஷேகமும், காமாட்சி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. இதேபோல், பேரம்பாக்கம் அடுத்த, கூவம் கிராமத்தில் உள்ள, திரிபுரசுந்தரி உடனுறை திரிபுராந்தக சுவாமி கோவிலில், திரிபுராந்தக சுவாமிக்கு அன்னாபிஷேகமும், திரிபுரசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. இரவு 7:30 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !