ஆத்தூர் கோயில்களுக்கு தானமாக வந்த மாடுகள் விற்பனை
ADDED :4368 days ago
திருக்கோயில்களுக்குத் தானமாக வரும் மாடுகளை ஏலம் விடக் கூடாது என்பது நீதிமன்ற உத்தரவாகும். எனினும், இந்த உத்தரவை மீறி நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில், நைனாமலை பெருமாள் கோயில், தலமலை சஞ்சீவி வெங்கடேசப் பெருமாள் கோயில் ஆகியவற்றில் கடந்த சில மாதங்களில் 600-க்கும் மேற்பட்ட மாடுகள் குறைந்த விலைக்கு ஏலம் விடப்பட்டுள்ளன. இதுகுறித்து, இந்து சமய அறநிலையத் துறையின் சேலம் மண்டல இணை ஆணையரிடம் கேட்ட போது, நீதிமன்ற உத்தரவுப்படி, மாடுகளை ஏலம் விடமாட்டோம் என்றார். ஆனால், இந்த மூன்று கோயில்களிலும் அக்டோபர் 12-ஆம் தேதி 120 மாடுகள் குறைந்த விலைக்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளன.