சுந்தரேசபுரம் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை
ADDED :4368 days ago
கடையநல்லூர்: சுந்தரேசபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. ஸ்ரீ18 சித்தர்கள் யோக தியான வழிபாடு அறக்கட்டளை சார்பில் கடையநல்லூர், சுந்தரேசபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூஜையை முன்னிட்டு அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் அன்னாபிஷேகம் நடந்தது. கோயில் நிர்வாகி, அறக்கட்டளை தலைவர் கணபதி சுப்பிரமணியன், செயலாளர் இளங்கோ மற்றும் பலர் கலந்து கொண்டனர். விளக்கு பூஜையை மகளிர் குழுவினர் விஜயா, தங்கமாரி, காளியம்மாள் உள்ளிட்ட குழுவினர் செய்தனர்.