உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் அகத்திய கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை

திருச்செந்தூர் அகத்திய கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை

திருச்செந்தூர் அகத்தியர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. திருச்செந்தூர் சன்னதித்தெருவிலுள்ள ஸ்ரீ அகத்தியர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு அகத்திய பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அகத்தியர் நாம வழிபாடு, தீபவழிபாடு, திருமுறை பாராயணம் மற்றும் மகேஸ்வர பூஜை ஆகியன நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பொதிகை மலை புனித யாத்திரை குழுவினர் மற்றும் செந்தில் பொதிகை ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !