மழை வேண்டி கஞ்சி கலச ஊர்வலம்!
ADDED :4370 days ago
சேத்தூர்: சேத்தூரில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற 28வது ஆண்டு விழா நடந்தது. போஸ் துவக்கிவைத்தார். ஆன்மிக ஊர்வலத்தை, பத்மநாபன் தலைமை ஏற்று நடத்தினார். பக்தர்கள், நகரின் முக்கிய வீதிகளிள் வழியாக, அக்கினிசட்டி, முளைப்பாரி, கலசம் எடுத்து வந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாட்டினை சேத்தூர் ஆதிபராசக்தி மன்ற அமைப்பாளர் பால்சாமி செய்திருந்தார்.