உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்­சி­புரம் கோவில்கள் பற்றிய வரலாற்று புத்தகம் வெளியிட...முடிவு!

காஞ்­சி­புரம் கோவில்கள் பற்றிய வரலாற்று புத்தகம் வெளியிட...முடிவு!

காஞ்­சி­புரம்: காஞ்­சி­புரம் மாவட்­டத்தில் உள்ள கோவில்­களின் வர­லாறு மற்றும் அங்கு நடக்கும் நிகழ்ச்­சிகள் குறித்த தகவல் தொகுப்பு அடங்­கிய புத்­த­கத்தை வெளி­யிட, அற­நி­லையத் துறை முடிவு செய்­துள்­ளது. இதற்­காக, மூன்று அதி­கா­ரிகள் கொண்ட குழு அமைக்­கப்­பட்டு உள்­ளது.

1,389 கோவில்கள்: காஞ்­சி­புரம் மாவட்­டத்தில், அற­நி­லையத் துறை கட்­டுப்­பாட்டில், 1,389 கோவில்கள் உள்­ளன. இவை வருவாய் அடிப்­ப­டையில் நிர்­வாக வச­திக்­காக, நான்கு வகை­யாகப் பிரிக்­கப்­பட்டு உள்­ளன. இவை­த­விர, 3,500க்கும் மேற்­பட்ட கிராம கோவில்­களும் உள்­ளன. சொத்­துகள் அதிகம் உள்ள கோவில்­களை பரா­ம­ரிக்­கவும், பாது­காக்­கவும் செயல் அலு­வ­லரை நிய­மித்து நிர்­வாகம் நடத்­தப்­ப­டு­கி­றது. பிர­தான கோவில்­களில், தொடர்ந்து நிகழ்­வுகள் நடப்­பதால், அவற்றின் வர­லாறு, வழி­பா­டுகள் பற்­றிய தொகுப்பு உள்­ளது. பெரும்­பா­லான கோவில்­களில், கோவில் தொடர்­பான வர­லாறு மற்றும் கோவில் மூல­வரை வழி­படும் முறை, அதன் சிறப்­புகள் மற்றும், கோவிலின் பிர­தான நிகழ்­வுகள் குறித்த தக­வல்கள் தொகுக்­கப்­பட வில்லை.

தகவல் சேக­ரிப்பு: அனைத்து கோவில்கள் பற்­றிய தக­வல்­களை தொகுத்து, அவற்றைப் புத்­த­க­மாக வெளி­யிட, காஞ்­சி­புரம் மாவட்ட இந்து சமய அற­நி­லையத் துறை முடிவு செய்­துள்­ளது. இதற்­காக, மூன்று பேர் கொண்ட குழுவை அற­நி­லையத் துறை அமைத்­துள்­ளது. இந்த குழு­வினர், முதற்­கட்­ட­மாக கோவில் குறித்து வெளி­யான கட்­டு­ரைகள் மற்றும் கோவில்­களை சார்ந்து வாழும் முதி­ய­வர்கள் எழு­திய குறிப்­பு­களை சேக­ரிக்கத் துவங்கி உள்­ளனர். முக்­கிய கோவில்­களில் செயல் அலு­வ­லர்­க­ளாக பணி­யாற்­று­ப­வர்­களே, கூடுதல் பொறுப்­பாக இந்த குழுவில் நிய­மிக்­கப்­பட்டு உள்­ளனர். இந்த குழு சேக­ரிக்கும் தகவல்கள் மற்றும் புகைப்­ப­டங்­களை தொகுத்து, நிபு­ணர்­களின் ஆலோ­ச­னை­யுடன் புத்­த­க­மாக வெளி­யிட, அற­நி­லையத் துறை நிர்­வாகம் முடிவு செய்­துள்­ளது. இந்த தக­வல்கள் அற­நி­லையத் துறை இணை­ய­த­ளத்­திலும் வெளி­யி­டப்­பட உள்­ளது.

நிதி கைவி­ரிப்பு: இந்த புத்­த­கங்­களை வெளி­யிட, அற­நி­லையத் துறைக்கு தனி­யாக நிதி ஒதுக்­கப்­ப­ட­வில்லை. இதனால், நன்­கொ­டை­யா­ளர்கள் உத­வி­யுடன் வெளி­யிட முடிவு செய்­துள்­ளது. இது குறித்து, அற­நி­லையத் துறை உயர் அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது: காஞ்­சி­புரம் மாவட்டம் ஆன்­மீகம் மற்றும் சுற்­றுலா தல­மாக உள்­ளதால், ஏரா­ள­மானோர் வந்து செல்­கின்­றனர். மாவட்­டத்தில் பிர­தான கோவில்­களை தவிர, பெரும்­பா­லான கோவில்­களின் வர­லாறு மற்றும் சிறப்பு குறித்து, வெளியூர் பக்­தர்­க­ளுக்கு தெரி­வ­தில்லை. கோவில்­களின் சிறப்பை கூறும் வகையில், கடந்த, 1984 ஆண்டு ஒரு சில பிர­தான கோவில்­களின் வர­லாறு மட்­டுமே புத்­த­க­மாக வெளி­யி­டப்­பட்டு உள்­ளது. மற்ற கோவில்கள் பற்­றிய தக­வல்­களை சேக­ரித்து வரு­கிறோம். முதற்­கட்­ட­மாக மாவட்­டத்தில் சிறப்பு வாய்ந்த கோவில்­களின் பட்­டியல் தயா­ரிக்­கப்­பட்டு உள்­ளது. அதன் அடிப்­ப­டையில் மூன்று செயல் அலு­வ­லர்கள் அடங்­கிய குழு­வினர் தக­வல்­களை சேக­ரிக்கும் பணியில் ஈடு­பட்டு உள்­ளனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்­திற்குள், பணிகள் முடிந்து, புத்­த­கங்கள் இறுதி வடிவம் பெற்­று­விடும் என, எதிர்­பார்க்­கிறோம். புத்­தகம் வெளி­வரும் போது, சுற்­றுலா பய­ணிகள் மற்றும் வெளியூர் பக்­தர்­க­ளுக்கு கோவில்­களின் சிறப்­புகள் தெரியும் வாய்ப்பு ஏற்­படும்.
இவ்­வாறு, அதி­காரி கூறினார்.

தொகுக்­கப்­படும் விவ­ரங்கள்:

கோவில் வர­லாறு
பரி­கார தலம்
கோவில் முழு முக­வரி
கோவில் செயல் அலு­வலர் தொடர்பு எண்
கோவில் பூசாரி அலை­பேசி எண்
கோவி­லுக்கு செல்லும் வழித்­தடம் வரை­படம்
பூஜைகள் பற்­றிய விவரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !