ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா!
ADDED :4369 days ago
ராமநாதபுரம்: வழிவிடு முருகன் கோயிலில் நவ.,3ம் தேதி, கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. அன்று காலை 7.30 முதல் 8.30 மணிக்குள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் இரு வேளை முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியாக, நவ.,8ம் தேதி இரவு 7.30 மணிக்கு சூரசம்ஹாரம், மறுநாள் காலை 11 முதல் 12 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. தினமும் இரவு, ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது.