சொக்கம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :4370 days ago
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் சொக்கம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோவிலில் திருப்பணிகள் கடந்த மாதம் நிறைவு பெற்றது. அதை தொடர்ந்து, கடந்த 18ம் தேதி யாகசாலை பூஜை தொடங்கியது. ஞாயிற்று கிழமை காலை 9:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் வீருபொம்மு செய்து இருந்தார்.