மன்னாதீஸ்வரர் கோவிலில் திருட்டு
ADDED :4400 days ago
கிருமாம்பாக்கம்: கன்னியக்கோவிலில், கோவில் உண்டியலை உடைத்து, பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியக்கோவிலில் புகழ் பெற்ற பச்சைவாழியம்மன், மன்னாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது. கோவில் பூசாரி நேற்று முன்தினம் இரவு கோவிலை பூட்டிவிட்டு, சென்றார். நேற்று காலை கோவிலுக்கு வந்து பார்த்த போது, உண்டியலை உடைத்து, பணத்தை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள், கோவில் மதில் சுவரின் மேல் ஏறி கோவிலுக்குள் சென்று உண்டியல் பணத்தை திருடிச் சென்றிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.