உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவிளக்கு பூஜை கட்டணம்: பக்தர்கள் கோரிக்கை!

திருவிளக்கு பூஜை கட்டணம்: பக்தர்கள் கோரிக்கை!

நாகர்கோவில்:நாகர்கோவில் நாகராஜா கோவில் பக்தர்கள் சங்க தலைவர் முத்துக்கருப்பன், திருக்கோவில்கள் இணை ஆணையருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:– குமரி மாவட்ட கோவில்களில் திருவிளக்கு ஏற்றி பூஜை செய்வதற்கு விளக்கு ஒன்றுக்கு ரூ.100 கட்டணம் வசூலிப்பதை நிறுத்தவேண்டும் என்ற வேண்டுகோளுக்கு இணங்க இந்து அறநிலையத்துறை அமைச்சர் பரிந்துரைப்படி உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை ஆணையர் அலுவலகத்தில் கடிதம் நகல் வந்துள்ளது. எனவே ரூ.100 கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். திருவிளக்கு பூஜைக்கு ரூ.100 கட்டணம் அறிவித்த பின்னர் கோவில்களில் திருவிளக்கு பூஜை நடத்தும் பெண்களின் கூட்டம் குறைந்து விட்டது. எனவே கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி பெண் பக்தர்கள் ஆதங்கத்தை தீர்த்துவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !