உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கமுதி பகுதியில் சங்கடகர சதுர்த்தி உற்சவம்!

கமுதி பகுதியில் சங்கடகர சதுர்த்தி உற்சவம்!

கமுதி முத்துமாரியம்மன் கோயிலில்,  கணபதிக்கு வெள்ளி கவசங்கள் அணிவித்து, மலர் அலங்கார தீப ஆராதனை சிறப்பு பூஜைநடந்தது.  ராமநாதபுரம் மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் உற்சவ சிறப்பு பூஜைகளை அர்ச்சகர் ராமசுப்பிரமணிய குருக்கள் நடத்தினார். அபிராமத்தில் வள்ளி, தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர் ஆலயம், அருண் சக்கரவர்த்தி வணிக வளாக லட்சுமி விநாயகர் ஆலயம், சித்தி விநாயகர் ஆலயம், பேரையூர் பத்திர காளியம்மன் ஆலயம், கண்மாய்க்கரை லங்கா விநாயகர் ஆலயம், பெருநாழி சத்திரிய நாடார் உறவின் முறைக்குப் பாத்தியமான முத்துமாரியம்மன் ஆலயம் ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !