கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் சீசன்: சார் ஆட்சியர் ஆய்வு!
ADDED :4398 days ago
கன்னியாகுமரியில் நவ. 15-ஆம் தேதி தொடங்கி, ஜன. 15-ஆம் தேதி வரையிலான 60 நாள்கள் ஐயப்ப பக்தர்கள் சீசனுக்கு நாள்தோறும் 20 ஆயிரம் முதல் 35 ஆயிரம் பக்தர்கள் வரை வந்து செல்வார்கள். இதனால் உள்ளூர் பேரூராட்சிக்கு ரூ. 1.5 கோடிக்கும் அதிகமான வருவாய் கிடைத்து வருகிறது. சீசன் தொடங்க உள்ள நிலையில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்வது தொடர்பாக நாகர்கோவில் சார் ஆட்சியர் சங்கர்லால் குமாவத், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஜோதி முருகன் (பொறுப்பு), பேரூராட்சி செயல் அலுவலர் க. அம்புரோஸ், சுகாதார அலுவலர் முகைதீன் பிச்சை உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.