கமுதி பகுதி கோயில்களில் கார்த்திகை உற்சவம் கோலாகலம்!
ADDED :4462 days ago
கமுதி: முத்து மாரியம்மன் கோயிலில், சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்து, வெள்ளி கவசம் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. உற்சவத்தில் ஏறாளமானோர் கலந்து கொண்டனர். மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகளை அர்ச்சகர் ராமசுப்பிரமணிய குருக்கள் நடத்தினார். ஏற்பாடுகளை கார்த்திகை உற்சவ குழுவினர் கவனித்தனர். கமுதி அருகே அபிராமம் வள்ளி, தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர் ஆலயம், மேலக்கொடுமலூர் குமரய்யா கோயில், பேரையூர் பத்திர காளியம்மன் கோயில், பெருநாழி முத்து மாரியம்மன் கோயில் உள்ளிட்டவற்றிலும் கார்த்திகை உற்சவம் நடைபெற்றது.