உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செண்பகவல்லியம்மன் கோயில் திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்

செண்பகவல்லியம்மன் கோயில் திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்

கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் இன்று நடக்கிறது. மேலும் வரும் 31ந்தேதி சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா மிகவும் முக்கியமானதாகும். இந்தாண்டு ஐப்பசி திருவிழா கடந்த 20ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர் முறையில் சிறப்பு பூஜைகளும், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்பாள் திருவீதி உலாவும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9ந்திருநாளான இன்று தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி காலையில் திருத்தேர் வடம் பிடித்தலும், மாலையில் அம்பாள் அன்னவாகனத்தில் திருவீதி உலாவும் நடக்கிறது. மேலும் வரும் 31ந்தேதி 12ம் திருநாளாக காலையில் அம்பாள் பல்லக்கில் திருவீதி உலாவும், மாலையில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமி யானை வாகனத்திலும், அம்மன் பல்லக்கிலும் பட்டணப் பிரவேசம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !