உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / டோல் கேட் அடாவடி வசூல்: பழநி வரும் பக்தர்கள் பாதிப்பு!

டோல் கேட் அடாவடி வசூல்: பழநி வரும் பக்தர்கள் பாதிப்பு!

பழநி: பழநியில் நகராட்சி நுழைவு வரிக்கட்டணம் ("டோல் கேட்) நிர்ணயக்கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கின்றனர். பழநிக்கு தினமும் ஆயிரக் கணக்கான சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. வாகனங்களுக்கு, நகராட்சி சார்பில் குத்தகை எடுத்துள்ளவர்கள் நுழைவுவரி கட்டணம் வசூலிக்கின்றனர். பழநி அடிவாரம் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களிடமும் நுழைவு கட்டணம் வசூலிப்பதோடு, தேவஸ்தான சுற்றுலா பஸ் நிறுத்துமிடம், தங்கும் விடுதிகள், பை-பாஸ் ரோடு பகுதிகளில் நிறுத்தப்படும் வாகனங்களிடமும் கட்டணம்வசூலிக்கின்றனர். பஸ்-ரூ.85, லாரி-ரூ.60, வேன்-ரூ.50, கார்- ரூ.30 என நகராட்சி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட, இரண்டு மடங்கு கூடுதலாக வசூலிக்கின்றனர். இக்கட்டண சுமையை பக்தர்கள், சுற்றுலா பயணிகளே ஏற்பதால், டிரைவர்கள் பொருட்படுத்துவது கிடையாது. நகராட்சி நிர்ணயம் செய்துள்ள கட்டண விபரங்கள் கொண்ட அறிவிப்பு பலகையில் குத்தகைதாரர் கட்டணத்தொகையை அழித்துள்ளனர். நகராட்சி முத்திரை, அலுவலர் கையொப்பம் இல்லாமல், சுற்றுலா வாகனங்களில் வருபவர்களிடம் கூடுதலாக வசூலிப்பது தொடர்கிறது. மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பக்தர்கள் பேட்டி
: சி.விஸ்வநாதன், பல்லடம்: குடும்பத்துடன் காரில் கோயிலுக்கு வந்துள்ளோம். நுழைவரிகட்டணமாக ரூ.60 வசூலிக்கின்றனர். ஆனால் ரூ.50க்கான சீட்டு தருகின்றனர். ரூ.10 போலீசாருக்கு என்கின்றனர். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜீ.கோவிந்த ராஜ்,தஞ்சாவூர்: கர்நாடக,கேரளா வரை வேனில், சுற்றுலா வந்தோம். அங்கு வாகன வசூலுக்கு "கம்ப்யூட்டர் பில்" தருகின்றனர். பழநியில் நுழைவரிகட்டணத்தை மிரட்டி வசூலிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !