பெரியபட்டிணம் தர்கா கொடியிறக்கம்!
ADDED :4463 days ago
கீழக்கரை: பெரியபட்டிணம் செய்யதலி ஒலியுல்லா தர்காவில், சந்தனக்கூடு விழாவின் இறுதி நிகழ்ச்சியாக கொடியிறக்கம் நேற்று மாலை நடந்தது. பெரியபட்டிணத்தில் மகான் செய்யதலி வலியுல்லாஹ் 112 வது ஆண்டின் சந்தனக்கூடு விழா அக். 12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை சிறப்பு பிரார்த்தனைக்கு பின் தர்காவில் தக்பீர் முழக்கத்துடன் கொடியிறக்கம் நடந்தது. அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்றனர். விழா கமிட்டி தலைவர் எம்.சிராஜ்தீன், செயலாளர் அப்துல் மஜீது, ஜலால், ஜமால் ஜூம்மா பள்ளி தலைவர் அப்துல் லத்தீப், கவுன்சிலர் அபிபுல்லா பங்கேற்றனர்.